தர்மபுரி மாவட்டம்
அரூர் அருகே கோபாலபுரம் பகுதியில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது.
ஆலையில் கரும்பு அரவை பணி தொடங்கியதிலிருந்து ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அருகில் உள்ள விவசாய நிலங்கள் கிணறுகளில் தேங்கி வருவதால் துர்நாற்றம் வீசி வருகிறது .
கழிவு நீரால் விவசாய நிலங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் குடிக்க உகந்த நீராக இல்லாமல் மக்கள் குடிநீர் குடிக்க வழி இல்லாமல் தவித்து வருகின்றனர்
கழிவுநீர் காரணமாக சுற்றுப்புற சூழல் பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக விவசாயிகள் பொதுமக்கள் விலங்கினங்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
ஒரு டன் கரும்பு ரூ5000 வழங்க வேண்டும் கரும்பு வெட்டும் கூலி மற்றும் வண்டி வாடகை ஆலை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கோரிக்கை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலுச்சாமி,
மாநிலத் தலைவர் ஆலயமணி.கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவசாய குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்