கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் வள்ளலார் உதவி பெறும் தொடக்க பள்ளியில் நடைபெற்றது
கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சைமாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் ,வள்ளலார் கல்வி அறநிலையங்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தியஇலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமில் .சங்கத் தலைவர் லயன் சரவணன், பள்ளியின் தலைவர் தயாளன் ஆகியோர் பள்ளி வளாகத்தில் உள்ள வள்ளலார் சிலைக்கு மாலை அணிவித்து துவக்கி வைத்தார்கள்.சங்க செயலாளர் லயன் கருணாகரன் சாசன தலைவர் லயன் இரவி பொருளாளர் சிவராமகிருஷ்ணன் முன்னாள் பொறுப்பாளர்கள் லயன் கணேசன் லயன் குமார் லயன் பெருமாள் லயன் யேசுராஜ் ,திருநாகேஸ்வரம் லயன்ஸ் சங்க தலைவர் லயன் இராதா கிருஷ்ணன் லயன் முரளி தரன் மற்றும் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவை செய்தார்கள் .
சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் லயன் செந்தில், சைட்பார் ஃபர்ஸ்ட் மாவட்ட தலைவர் லயன் வேல்முருகன் லயன் வை.கோபால்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
.
அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று பொது மக்களுக்கு கண்களை பரிசோதித்தனா். நகரப்புற ,கிராமப்புற பொது மக்கள் சேர்ந்த 210 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 45 பேருக்கு கண்ணாடிக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து 55 பேர் கண் புரை கண்டறியப்பட்ட நோயாளிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களுக்கு உள்விழி லென்ஸ், அறுவைச் சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து பேருந்து கட்டணம் உள்ளிட்டவை இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டன.
முகாமில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியைகள் துப்புரவு பணியாளர்கள் தேசிய மாணவர் படை மாணவர்கள் ஆகியோர் சிறப்பாக உதவி செய்தார்கள்.முகாமிற்கான ஏற்பாடுகளை சாசன தலைவர் மற்றும் பள்ளி தலைவர் செயலர் ஆசிரியைகள் ஆகியோர் செய்திருந்தனர்