செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு
நலன் கருதி 2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா
பொருத்தி அசத்தினர்.
அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 2001 ம் ஆண்டு பயின்ற மாணவ மாணவியர் சார்பாக 2 லட்சத்து 25 ஆயிரம் செலவில் கண்காணிப்பு
கேமரா பொருத்தப்பட்டது.
இந்நிகழ்வின்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயகுமார், பள்ளியின்
முன்னாள் மாணவர்களின் தூதுவர் தணிகைவேல்,உதவி தலைமை ஆசிரியர் முனியாண்டி, 2001 ம் ஆண்டு முன்னாள் மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர்கள்,
முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்
பெருந்திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்து மகிழ்ந்தனர்.