நெற்குணப்பட்டு புனித தோமையார் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் எண்களை நடைமுறைப்படுத்திய 7 ஆம் வகுப்பு மாணவி யாமினிக்கு பாராட்டு..


புதுப்பட்டினம்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தமிழன்னை புலனக்குழு சார்பில் நெற்குணப்பட்டு புனித தோமையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழில் பிழையின்றி அழகாக எழுதும் போட்டி 6 ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் 6 முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 51 பேர் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி 10 ஆம் தேதி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் அருட்சகோதரி வேளாங்கண்ணி தலைமை தாங்கினார். தமிழாசிரியர்கள் ஆ அர்ச்சனா, மு பரமேஸ்வரி, கோ. கோகிலா, அ.சுகந்தி பெனிட்டா மேரி மற்றும் தமிழன்னை புலனக் குழு நிறுவுநர் அகநம்பி தி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சமூக ஆர்வலர் கீழார் ஆ.சிவா கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் ஜெயஸ்ரீ, ஐஸ்வர்ய லட்சுமி, கோவர்த்தினி, ஹேமஸ்ரீ,காஷினிகா, ஜெயஸ்ரீ ஆகியோருக்கு தலா 500 மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார்.போட்டியில் பங்கேற்ற யாமினி என்ற ஏழாம் வகுப்பு மாணவி தமிழ் எண்களை எழுதி நடைமுறைப்படுத்தியதற்காக புலனக் குழு நிறுவுநர் பாலசுப்பிரமணியன் மாணவிக்கு சால்வையணிவித்து வாழ்த்து தெரிவித்தார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *