தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை சார்பில் 70 வயது பூர்த்தி அடைந்த தம்பதியர்களுக்கு சிறப்பு செய்யும் விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து சிறப்பு செய்தார்.

இதனை தொடர்ந்து உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் 70 வயது பூர்த்தி அடைந்த 15 மூத்த தம்பதிகளுக்கு திருக்கோயில் சார்பில் சிறப்பு செய்தல் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது .

இதில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு மூத்த தம்பதியர்களுக்கு வேட்டி,சட்டை,மாலை மஞ்சள்,குங்குமம்,பழ வகைகள் உள்ளிட்ட சீர்வரிசை தட்டுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் நகர மன்ற தலைவர் புவனபிரியா செந்தில்,உதவி ஆணையர் வீரபாண்டியன்,செயல் அலுவலர் கவியரசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *