திருவெற்றியூர் விளையாட்டு வீரர்களை பாராட்டி மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விருது வழங்கினார்
டிவிஎம் சேவா பாலம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் செரியன் நகர், புது வண்ணாரப் பேட்டை, கேரம் போர்டு பயிற்சி மையத்தில்
கேரம் போர்டு விளையாட்டில் உலக சாதனை புரிந்த மாணவிகளான
எம்.காசிமா எல்.கீர்த்தனா 45 பவுன் நகைகளை கீழே கண்டெடுத்து உரிமையாளரிடம் வழங்கிய தூய்மைப் பணியாளர் எஸ்.பத்மா மணலி புது நகரில் இரண்டு பவுன் தங்க நகைகளை கண்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளரான ஷகிலா ராணி அனைவருக்கும் பாராட்டு நடைபெற்றது
விழாவிற்கு பாலம் எம் இருளப்பன் தலைமை தாங்கினார் மாமன்ற உறுப்பினர் தேவி முன்னிலை வைத்தார் விழாவில் மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதியரசர் கண்ணதாசன் கேடயங்கள் தையல் இயந்திரங்கள் புத்தாடைகளை வழங்கி கௌரவித்தார்
விழாவில் காங்கிரஸ் பிரமுகர் இதயதுல்லா காவல்துறை கண்காணிப்பாளர் எஸ் ஜெ. ஜாண் கென்னடி மூத்த மருத்துவர் பி நெல்லையப்பர் வட்டச் செயலாளர்கள் கதிரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்பாலம் செயலாளர் எஸ்.பெஞ்சமின் நன்றி தெரிவித்தார்,