தென்காசி மாவட்டம்
சாம்பவர் வடகரை அன்னை அபிராமி திருமண மண்டபத்தில்
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவில் இலவச போட்டி தேர்வு பயிற்சி மையம் தொடக்க விழா நடைப் பெற்றது.
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையிலும் தென் மண்டல கல்வி குழு தலைவர் பாலமுருகன்
தென் மண்டல கல்வி குழு துணை தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது
தொடக்க விழாவாக பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ படத்திற்க்கும் இசை அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் ஆகியோர் திருவுருவ படத்திற்க்கும் சுரண்டை வேலன் குரூப் அதிபர் கே டி கே காமராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
பின்பு நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி படிப்பை முடித்த இளைஞர்கள் அரசு தேர்வுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் அந்தோணி பால்ராஜ் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் ஹரி பிரியாணி ஹரிஹர செல்வன் ஆசிரியர் அருண் மற்றும் கருப்பசாமி பொதுச் செயலாளர் ஜான் டேவிட் பொருளாளர் சுப்ரமணியன் கல்வியாளர்கள் தொழிலதிபர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் முடிவில் கிளைத் தலைவர் மோகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.