வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழுவின் சார்பில் நிதியளிப்பு சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலங்கைமான் ஒன்றிய குழுவின் சார்பில் நிதி அளிப்பு சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு இளைஞர் பெருமன்ற வலங்கைமான் ஒன்றிய செயலாளர் வி. பாக்கியராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ரங்கராஜன் அரசியல் விளக்க உரை ஆற்றினார். வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் எஸ். எம். செந்தில்குமார், ஒன்றிய உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் கிளை வாரியாக கொண்டு வந்திருந்த நிதியினை பெற்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கு. ராஜா அவர்களிடம் மாவட்ட மையத்திற்கு முதல் கட்டமாக ரூபாய் 1 லட்சம் கொடுக்கப்பட்டது. நிதியைப் பெற்றுக் கொண்டு நூற்றாண்டு கண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றையும், நாம் செய்த தியாகத்தையும், கட்சியின் குறிக்கோளையும் பற்றி பேசி நிறைவு செய்தார். கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் கலியபெருமாள், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சின்ன ராசா, மருதையன், பூசாந்திரம், விஜயகுமார் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.