துறையூர் பிப்ரவரி 12
திருச்சி மாவட்டம் துறையூரில் “பிரைட் அறக்கட்டளை” 15 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ராசி மஹாலில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது. பிரைட் அறக்கட்டளையின் நிறுவனர் செந்தில்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற பழங்கால நாணயங்கள் கண்காட்சியை திருச்சி ரெங்கா ரியல் எஸ்டேட் உரிமையாளர் நாட்டாண்மை சண்முகம் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அழகு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.இந்த நிகழ்வில் கலை புரோமோட்டர்ஸ் ஸ்டாலின் வீரப்பன், இயக்குனர் கலைவாணன், ஆர் ஆர் புரோமோட்டர்ஸ் ரெங்கராஜ் (புல்லட் ராஜ்),பெப்கோ என்டர்பிரைசஸ் ரஹ்மத்துல்லா, தாய்க்கோயில் சுரேஷ், அழகு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் எம்டி பிரபு,இயக்குனர் பிரபா, ஜோஷ் சோலார் மணிமாறன், தெர்வோ டிஜிட்டல் அருண், யோகோ டிரேடர்ஸ் சதீஷ் மற்றும் ஏர்செல் பாலு, பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பழங்கால நாணயங்கள் கண்காட்சியை கண்டு களித்தனர்.

வெ. நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *