
வலங்கைமானில் ரூபாய் ஒரு கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் கடந்த 19747- ஆம் ஆண்டு முதல் வடக்கு அக்ரஹாரம் பகுதியில், கிழக்கே கீழ விடையல் வருவாய்கிராமத்தையும், மேற்கே ஆவூர் வருவாய் கிராமத்தையும், தெற்கே ஆலங்குடி வருவாய் கிராமத்தையும் உள்ளடக்கிய வலங்கைமான் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஆதிச்ச மங்கலம், கோவிந்தகுடி, சந்திரசேகரபுரம், தொழுவூர், செம்மங்குடி, மேல விடையல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மிகப் பழமையான கட்டிடத்தில் சுமார் கடந்த 75 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி, பழுதடைந்த கட்டிடத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் பொதுமக்களின் தொடர் கோரிக்கையினை ஏற்று பழுது அடைந்த பழமையான பத்திரப்பதிவு அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்டு, அதே இடத்தில் ரூபாய் 1.83 கோடி மதிப்பீட்டில், திருவாரூர் பிரிவு பொதுப்பணித்துறை கட்டுமானம் மூலம் புதிய கட்டுமான பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக துவங்கப்பட்டது. 2360 சதுர அடி பரப்பளவில் தரைத்தளமும், அதேபோன்று 2360 சதுர அடி பரப்பளவில் முதல் தளமும் என 4720 சதுர அடி பரப்பளவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
அலுவலகம் கணினி அறை, பதிவேடுகள் அறை, இருப்பு அறை, கழிவறை என அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுமான பணி கடந்த சில நாட்களுக்கு முன்பாக முடிவுற்றது. தமிழக முதல்வர் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் பத்திரப்பதிவு அலுவலக கட்டிடத்தை நேற்று திறந்து வைத்தார். பின்னர் வலங்கைமான் புதிய பத்திரம் பதிவு அலுவலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட பத்திரப்பதிவு தணிக்கை அலுவலர் ஜெயக்குமார், வலங்கைமான் சார்பதிவாளர் புவனேஸ்வரி, திமுக வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன், வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி, வலங்கைமான் பேரூர் திமுக செயலாளர் பா. சிவனேசன், வலங்கைமான் பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ்மாறன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். நிகழ்ச்சியில் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்பத் துறை ஒருங்கிணைப்பாளர் அ.அன்பு பிரபு, வலங்கைமான் பேரூர் திமுக அமைத்தலைவர் சோம.மாணிக்கவாசகம், பேரூர் திமுக பொருளாளர் புருஷோத்தமன், பேரூர் துணை செயலாளர் வி.சி. ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி எஸ். ரவிச்சந்திரன், ஒன்றிய பிரதிநிதிகள் சிங்குத் தெரு எஸ்.ஆர். ராஜேஷ், சதானந்தம், புலவர் சிவ. செல்லையன், வில்வம், கௌதம ராஜன், 6-வது வார்டு திமுக பொருளாளர் கோ. சண்முகசுந்தரம் யாதவ், வலங்கைமான் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செல்வமணி, ராணி சோம.மாணிக்கவாசகம், க. செல்வம், பானுமதி வி. சி. ஆர், ரம்ஜான் பீவி சிவராஜ், வீரமணி, நூர்ஜகான் ஜெகபர் அலி, ஆனந்தகுமார், வசந்தி பாஸ்கர், சுமதி தர்மராஜன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், பத்திரப்பதிவு அலுவலக அலுவலர்கள், ஆவண எழுத்தர்கள் எஸ். சம்பத், ஜி. ரமேஷ், சிவ. கோபி, குணசேகரன், பாலகிருஷ்ணன், சேகர், குப்புசாமி மற்றும் ஆவண எழுத்தர் உதவியாளர்கள் உள்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.