கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.

பல்லடம் மங்கலம் சாலையில் லாரியில் கடத்திவரப்பட்ட
2340 போலி கோவா மதுபான குடுவைகள் பறிமுதல்-
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செட்டிபாளையம் சந்திப்பு சாலையில் அசோக் லைலாண்ட் லாரி மற்றும் இண்டிகா காரில்,2340 போலி கோவா மதுபான குடுவைகள் லாரியில் கடத்தப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ஆய்வாளர் திரு. காமராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் திரு உதயசந்திரன் தலைமையில் மற்றும் தலைமை காவலர் மதிவாணன் மற்றும் சி எல் யூ காவலர்கள் செட்டிபாளையம் சாலை சந்திப்பருகே சந்தேகத்திற்கிடமான அசோக் லைலாண்ட் லாரி இண்டிகா கார் ஆகிய இரண்டு வாகனத்தையும் சோதனை செய்தனர் இதில் போலி கோவா மதுபான குடுவைகள் இருப்பதை உறுதி செய்யப்பட்டு அசோக் லைலாண்ட் லாரியையும் ஒரு இண்டிகா காரையும் லாரி ஓட்டுநர் மற்றும் இண்டிகா காரில் பயணித்த நான்கு பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.