மணலியில் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ.

திருவொற்றியூர்

மணலி மண்டலம், 22 ஆவது வார்டு சின்ன சேக்காடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.இங்கு சுற்று வட்டார பகுதியில் புள்ள குடியிருப்புகளில் இருந்து குப்பைகள் கொண்டு வரப்பட்டு அதை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக தயாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மதியம் இங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த குப்பையில் திடீரென்று தீப்பற்றியது. நூற்றுக்கணக்கான டன் குப்பைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்ததால் இதில் பற்றிய தீ சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு புகை மண்டலமாக மாறியது.

இதுகுறித்து தகவல் அறிந்த மண்டலக்குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், கவுன்சிலர் தீர்த்தி ஆகியோர் தீ பற்றிய எரிந்த குப்பை கிடங்கு மையத்திற்கு சென்று, தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

மணலி எண்ணூர் அம்பத்தூர் மாதவரம் . எம். கே. பி. நகர். திருவொற்றியூர். போன்ற பல்வேறு பகுதியிலிருந்து 8 க்கும் தனியார் தீயணைப்பு துறை வாகனம் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் குப்பையில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பிளாஸ்டிக் ,ரப்பர் போன்ற ஏராளமான குப்பைகள் இருந்ததால் தீயை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
மணலி தீ அணைப்பு அலுவலர் முருகானந்தம். மற்றும் தீயணைப்பு வீரர்கள் 30க்கும் மேற்பட்ட பணியில் ஈடுபட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *