இளஞ்செம்பூர் ஸ்ரீ தம்புராட்டி அம்மன் கோவிலில் பௌர்ணமி விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவு நடைபெற்றது
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் தம்புராட்டி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை, ஆன்மீகச் சொற்பொழிவு நடைபெற்றது.
பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் திருக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திருநாளை முன்னிட்டு திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்று வருகிறது அந்த வகையில் தெய்வீகத் திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் சிந்தனை மன்றம் மற்றும் இளஞ்செம்பூர் கிராமப் பொதுமக்கள் சார்பில் மாசி மாதம் பௌர்ணமி விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவு இளஞ்செம்பூர் ஸ்ரீ முருகன், விநாயகர், தம்புராட்டி அம்மன் கோவிலில் வளாகத்தில் நடைபெற்றது.
இளஞ்செம்பூர் கிராம்பொதுமக்கள் தலைமை வகித்தனர், கிராமத்தலைவர் சந்திரசேகர், முன்னாள் தலைவர் பூபதி, கோவில் கோடாங்கி செல்லவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்,கிராமத் தலைவர் சந்திரசேகர் அனைவரையும் வரவேற்று பேசினார்,
கடலாடி அரசு கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கரிசல் கவி நீரா. பொன்முத்து,ஸ்ரீ பகவதி அறக்கட்டளை தலைவர் மு.வெள்ளைப்பாண்டியன், பசும்பொன் தேவர் சிந்தனை மன்றத்தின் தலைவர் வழக்கறிஞர் ஆறுமுகம் ,ஆப்பநாடு மறவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் இராம்குமார் பாண்டியன் ஆகியோர் கலந்து மாசிமகம், பௌர்ணமி விழாவின் முக்கியத்துவம், திருவிளக்கு பூஜை மகிமை,குலத்தெய்வ வழிபாடு சிறப்புகளை பற்றியும் ,தேவரின் ஆன்மீக சிந்தனைகளையும்,விடுதலைப் போரில் நேதாஜி தேவருடன் இணைந்து போராடிய இளஞ்செம்பூர் மண்ணின் சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகத்தை பற்றியும் பேசினார்கள். நிறைவாக இளஞ்செம்பூர் வடிவேல் நன்றி கூறினார்.