தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பெரியகுளம் அருகே பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் முன்னிலையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள் .

இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் பேரூராட்சிகளுக்குட்பட்ட மற்றும் வார்டுகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை கொண்டு செல்லும் வாகனங்களை தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

இதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகளுக்கு உட்பட்ட 177 வாரங்களுக்கு தலா 2 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் 354 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் மற்றும் 22 பேரூராட்சிக்கு உட்பட்ட 336 வார்டுகளுக்கு தலா 1 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் வீதம் 336 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு வழங்கினார்கள்

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நகர் மன்ற தலைவர்கள் தேனி ரேணு ப்ரியா பாலமுருகன் பெரியகுளம் சுமிதா சிவக்குமார் போடிநாயக்கனூர் ராஜராஜேஸ்வரி சங்கர் சின்னமனூர் அய்யம்மா ராமு கம்பம் வனிதா நெப்போலியன் கூடலூர் பத்மாவதி லோகந்துரை பேரூராட்சி மன்ற தலைவர்கள் பூதிப்புரம் கவியரசு பால்பாண்டியன் மேல சொக்கநாதபுரம் கண்ணன் காளி ராமசாமி தேவாரம் லட்சுமி பால் பாண்டி கோம்பை முல்லை மோகன் ராஜா ஒடைப்பட்டி வழக்கறிஞர் தனுஷ்கோடி அனுமந்தன் பட்டி ராஜேந்திரன் கம்பம் புதுப்பட்டி சுந்தரி பாஸ்கரன் பண்ணைப் புரம் லட்சுமி இளங்கோ மார்க்கையன்கோட்டை ஒ.ஏமுருகன் பழனிசெட்டிபட்டி வி.பி.ஏ. மிதுன் சக்கரவர்த்தி தென்கரை வே. நாகராஜ் தாமரைக்குளம் ச. பால் பாண்டி வடுகபட்டி சி நடேசன் வீரபாண்டி கீதா சசி போடி மீனாட்சிபுரம் திருப்பதி ஆண்டிபட்டி பொன் சந்திரகலா மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *