தாராபுரத்தில் வழி தெரியாமல் 30 அடி கிணற்றில் விழுந்த 2 வயது புள்ளிமான். வனத்துறையினர் மீட்பு .

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றம் கரையோரம் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தின் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் வழி தெரியாமல் இரவு நேரத்தில் புள்ளிமான் ஒன்று 30 அடி கிணற்றில் தவறி விழுந்தது. தாராபுரம் சோளக்கடை வீதி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் 45 என்பவர் காலையில் தனக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்காக தனியார் தோட்டத்தில் கொண்டு சென்று மேய்ச்சலுக்கு விடும்போது கிணற்றிலிருந்து சத்தம் வந்தது. இதனை அறிந்த யுவராஜ் அருகில் இருந்த கிணற்றுக்கு சென்று பார்க்கும் போது புள்ளிமான் ஒன்று கிணற்றின் பாம்பேறியில் நடந்து செல்ல முடியாமல் நின்றிருந்தது. இதனை பார்த்த யுவராஜ் உடனடியாக தாராபுரம் போலீசாருக்கும் , வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவத்தை அறிந்த காங்கேயம் வனச்சரகர் மௌனிகா ,

வனத்துறை வானவர் சேக் உமர், வனக்காப்பாளர் முகமது ஜலாலுதீன்,வனக்காவலர் குணசேகரன் மற்றும் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் விழுந்த புள்ளி மானை மீட்டு தாராபுரம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். கால்நடை மருத்துவர் ஜெயராம் காலில் அடிபட்ட புள்ளி மானுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சை அளிக்க இயலாது மேல் சிகிச்சைக்காக பெதப்பம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்தார். இது மட்டுமின்றி தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி வருகிறது. தெரு நாய்கள் இரவு நேரத்தில் புள்ளி மானை துரத்தியதால் புள்ளிமான் வழி தவறி கிணற்றில் விழுந்து காலில் படுகாயம் அடைந்தது சரிவந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *