கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு பிரிவு உபச்சார விழா தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி பேரவை உறுப்பினர்கள் சார்பில் கல்லூரிப் பேரவை நிறைவு விழா மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு பிரிவு உபச்சார விழா
கல்லூரியின் நிறுவனச் செயலர் கம்பம் என் ராமகிருஷ்ணன் எம் எல் ஏ வழிகாட்டுதலின் படி கல்லூரி இணைச் செயலாளர் என்.எம்.ஆர். வசந்தன் கல்லூரி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் வழிகாட்டுதலில் படியும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி. ரேணுகா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
கல்லூரிப் பேரவை கணினி உதவிப் பேராசிரியர் எஸ் லட்சுமி அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரிப் பேரவை மாணவி பிரைட்டல் ஆண்டறிக்கையை வாசித்தார் கல்லூரிப் பேரவை மாணவிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது முதல்வர் மற்றும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவிகள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துரை வழங்கினார்கள்
இதனைத் தொடர்ந்து மாணவியல் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் மூன்றாம் ஆண்டு மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரிவு உபச்சார விழா நிறைவு பெற்றது ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் ஆ. சுமதி நன்றி உரையாற்றினார் இந்த நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் மாணவியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி பேரவை உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்