தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வட தாரையில் புதிதாக கட்டப்பட்ட ரூ. 22 லட்சம் மதிப்பிலான கிளை நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
நூலகத்தை தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். விழாவுக்கு தாராபுரம் நகராட்சி மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றினார். தாராபுரம் நகர திமுக செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.இந்த நூலகத்தில் 35 பேர் அமர்ந்து படிக்கும் வகையில் இருப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் 12 கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதோடு வாசகர்கள் படிப்பதற்கு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தில் 2 ஆயிரத்து 259 பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.திறப்பு விழாவில் மூன்றாம் நிலை நூலகர் நாகராஜன், இரண்டாம் நிலை நூலகர் அரவிந்தன், நகராட்சி வார்டு உறுப்பினர்கள், வாசகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.