கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வலியுறுத்தி கடந்த கால் நூற்றாண்டு காலமாக தொடர்ந்து மக்கள் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.

கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி கும்பகோணம் வழக்கறிஞர் சங்கம் ஓராண்டு காலத்திற்கு மேலாக வாரத்திற்கு ஒரு நாள் தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம், வணிகர் சங்கங்களின் சார்பில் கடையடைப்பு போராட்டம், தபால் அனுப்பும் போராட்டம்,கோலமிடும் போராட்டம்,மனித சங்கிலி போராட்டம், பேரணி, உண்ணாவிரத போராட்டம், தொடர் முழக்கப் போராட்டம், கோட்டை முற்றுகை போராட்டம் என பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு இருக்கிறது.

கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் இன்றைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பரப்புரையின் போது ஒரத்தநாடு மற்றும் திருக்கடையூரில் கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் நாங்கள் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அறிவிப்போம் என்று வாக்குறுதி அளித்தார்.

நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கையின் போது இந்த அறிவிப்பை எதிர்பார்த்தோம் ஆனால் திராவிட மாடல் திமுக அரசு அறிவிக்கவில்லை.எனவே, ஏற்கனவே போராட்டக் குழு திட்டமிட்டு அறிவித்த படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறந்ததிகள் எங்களின் கோரிக்கையை அரசிடம் பேசி உடனடியாக கும்பகோணத்தில் புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கோவி. செழியன் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் அவர்கள் தலைமையிலும், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பாட்டாளி மக்கள் கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் ம.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட கழக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு சு.கல்யாணசுந்தரம் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சை மாவட்ட முன்னாள் தலைவர் சதீஷ்குமார் அவர்கள் தலைமையிலும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

அமைச்சர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் கன்னார்குடி ரவிச்சந்திரன்,தேமுதிக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ப.சுகுமாரன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பி.விஜய ஆனந்த், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.பி.எஸ்.ராஜசேகர்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நடராஜன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சொ.திருஞானம் பிள்ளை, திருப்பனந்தாள் தெற்கு ஒன்றிய செயலாளர் தமிழ் வேந்தன், திருப்பனந்தாள் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஹரி, திருப்பனந்தாள் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.ராகுல், திருப்பனந்தாள் தெற்கு ஒன்றிய தலைவர் சி.ராஜா,ஆடுதுறை நகரச் செயலாளர் எம்.சாமிநாதன், முன்னாள் நகர செயலாளர் எம்.ஆர். குமார்,மாவட்டத் துணைச் செயலாளர் டி.கே.ரவிராஜ், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.எஸ்.மாதையன், ஆடுதுறை நகர அமைப்பு செயலாளர் வி.ராஜி, திருவிடைமருதூர் நகர தலைவர் கோ.ஜெயபால்,திருபுவனம் நகர செயலாளர் நவகிருஷ்ணன், திருபுவனம் நகர தலைவர் கருணா ஜோதி, திருவிடைமருதூர் நகர செயலாளர் என்.பிரபு,திருப்பனந்தாள் மேற்கு ஒன்றிய தலைவர் ஆர்.பிரகாஷ், மாவட்ட வன்னியர் சங்க துணைத் தலைவர் கே.வெங்கட்ராமன், செல்வசேகர், திருப்பனந்தாள் முன்னாள் ஒன்றிய தலைவர் ஆர்.வெங்கடேசன், உழவர் பேரியக்க ஒன்றிய தலைவர் கலையரசன், தொகுதி பொறுப்பாளர் எம்.ராஜமாணிக்கம், திருப்பனந்தாள் மேற்கு ஒன்றிய முன்னாள் செயலாளர் துரைராஜ், வேப்பத்தூர் முன்னாள் தலைவர் செல்வராஜ், மாவட்ட துணை தலைவர் ஒன்றிய துணைத் தலைவர் கு.ம. வேல்வேந்தன், மா.யி.செந்தில், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஆர்.சதா சரவணன், திருப்பனந்தாள் நகர தலைவர் எஸ். செங்குட்டுவன், தேசிய முற்போக்கு திராவிடர் கழக அவைத்தலைவர் கே.கோவிந்தராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜே.சி.சுந்தரமூர்த்தி, திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.செல்வம்,திருப்பனந்தாள் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சஞ்சய் காந்த்,ஒன்றிய துணைச் செயலாளர் என்.இராஜ்குமார், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் எம்.எஸ்.அமீர் அலி,மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் டி.ராகவன், கேப்டன் மன்ற ஒன்றிய நிர்வாகி ஜே.ராஜா,மீனவர் அணி ஒன்றிய பொறுப்பாளர் மா.விக்கி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் எஸ்.பி. விஜயபாலன், திருவிடைமருதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.ஆர். ஜெகன்,திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் பெரப்படி எஸ்.ராஜ்மோகன், திருப்பனந்தாள் ஒன்றிய பொருளாளர் கே.துரை, மாவட்ட கழக பேச்சாளர் பி.அழகேசன்,மாவட்ட பிரதிநிதி எஸ். பூபதி, ஆடுதுறை சாதிக், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பி.ஆர்.உமா,விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி மாநில செயலாளர் தை.சேகர், மகளிர் விடுதலைப் பேரமைப்பு மாநில செயலாளர் கு.ரோஸ்லின்,குடந்தை மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.ஜெயசங்கர்,தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ரமிலா தமிழ்மாறன்,திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் செருகை.சுரேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சௌ.குபேந்திரன், குடந்தை மாநகர் மாவட்ட தலைவர்.கே.ஆர். சந்திரன்,மாவட்ட பொருளாளர் ம.வில்லியம்ஸ், மாநகர் மாவட்ட துணை செயலாளர் மைலீஸ்வரர் ராஜா, குடந்தை வடக்கு ஒன்றிய செயலாளர் சி.முருகராஜ் ,தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார்,இளந்தமிழ் புலிகள் பாசறை மாவட்ட அமைப்பாளர் க.ராஜேந்திரன், குடந்தை வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் அம்பேத் அரசன்,மாநகர் மாவட்ட ஊடகப் பிரிவு செயலாளர் பிரட்ரிக் பிரபாகரன்,திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் ராஜ்,ஊடகப்பிரிவு ராஜேஷ், பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய செயலாளர் ஜி பாலச்சந்திரன் முன்னாள் ஒன்றிய தலைவர் எஸ் சந்திரசேகரன் ஒன்றிய தலைவர் என் ராஜேஷ் ஒன்றிய தலைவர் பி சத்தியமூர்த்தி ஒன்றிய துணைத் தலைவர் வி மதிவாணன் ஒன்றிய பொதுச் செயலாளர் சதீஷ்குமார் பட்டியல் அணி மாவட்ட செயலாளர் எஸ் சரவணன் ஒன்றிய துணை செயலாளர் எஸ் சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *