தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் தனியார் பள்ளியில் ஆண்டு விழா முன்னிட்டு பாரம்பரியமும் புதுமையும் கலந்த ஒரு கலாச்சார விழா.

தாராபுரத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அரோபிந்தோ வித்யாலயாவின் ஆண்டு விழா, வெகு விமரிசையாக நடைபெற்றது. “Bharat- The Eternal Flame” என்ற தலைப்பில் நடைபெற்ற இவ்விழா, பாரம்பரியமும் புதுமையும் கலந்த ஒரு கலாச்சார விழாவாகச் சிறப்பாக அமைந்தது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக Zoho Schools of Learning- இன் தலைவர் திரு. ராஜேந்திரன் தண்டபாணி அவர்கள் கலந்துகொண்டு, கல்விக்குப் புதிய பரிமாணங்களை வழங்கும் வகையில் தனித்துவமாக உரையாற்றினார். பழைய கதைகளைப் புதிய பார்வையில் காணும் வழிமுறைகள், மாணவர்களுக்கு இருக்க வேண்டிய திறன்கள் மற்றும் எதிர்காலக் கல்வி நடைமுறைகள் குறித்த அவருடைய உரை பெரும் வரவேற்பைப் பெற்றது.

பள்ளியின் தாளாளர் திருமதி வினீதா கோவிந்தசாமி அவர்கள், பண்டைய இந்தியக் கல்வி முறைமை மற்றும் கல்வியின் உண்மையான நோக்கம் குறித்து உணர்வுப்பூர்வமாகவும் ஆழமான முறையிலும் பேசினார்.
900-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நடனம், நாடகம், பாடல், யோகா, சிலம்பம், களரி மற்றும் பல கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஒவ்வொரு நிகழ்ச்சியும் உயர்ந்த தரத்தில், பார்வையாளர்களின் மனதைக் கவரும் விதமாகக் கொண்டு செல்லப்பட்டது.

நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வினை நேரில் கண்டு மகிழ்ந்தனர். மேலும், உலகம் முழுவதிலும் உள்ள பலரும் சமூக ஊடகங்கள் மற்றும் நேரலை வாயிலாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாணவர்களின் திறமைகளைப் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *