இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி க்ஷத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியமான
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் இப்பகுதியில், மிகவும் பிரசித்தி பெற்றபழமை வாய்ந்த கோவிலாகும். இக் கோவிலில் வருடா வருடம்பங்குனி பொங்கல் திருவிழா இரண்டு வாரம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த வருட திருவிழா நேற்று கோவில் வடக்கு வாசல் முன்பு முகூர்த்த கால் நடும் விழாவுடன் துவங்கியது.சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட முகூர்த்த காலில் நவதானியங்கள் கட்டப்பட்டு நடப்பட்டது.

இவ்விழாவில் க்ஷத்திரிய நாடார் உறவின்முறை முறைகாரர்கள், அம்பலகாரர் பல்வேறு
கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அடுத்த மாதம் மார்ச் 23-ம் தேதி காப்பு கட்டி, கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 31-ம்தேதி பொங்கல் விழாவும்,ஏப்ரல் – 1ம் தேதி அதிகாலை பக்தர்கள் உடல் முழுவதும் களிமண் சேறு பூசும் சேத்தாண்டி வேடம் இடுதல் மற்றும் அக்கினிச் சட்டி திருவிழா,வேல்குத்துதல் போன்றவை நடைபெற உள்ளது. ஏப் – 3 ம் தேதி
கோவில் முன்பு 2007 திருவிளக்கு பூஜையும்,ஏப் – 4 ம் தேதி
முளைப்பாரி திருவிழாவும் நடைபெற உள்ளது.

மேலும் தினமும் இரவு அம்மன் வெள்ளிக் குதிரை, காமதேனு, கண்ணாடி சப்பரம், யானை, ரிஷபம், அன்னப்பறவை என பல்வேறு வாகனங்களில் நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். கோவில் முன்பு சூரசம்ஹாரம், கழுகேற்றம் நிகழ்ச்சிகளும் நடைபெறும். மேலும் தினமும் இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த திருவிழாவை காண்பதற்கு சென்னை, மதுரை, காரைக்குடி, புத்தூர், நகரி உட்பட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொள்வர்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கமுதி க்ஷத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்து வருகின்றனர்.இதே போல் அருந்ததியர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று கோவில் முன்பு நடைபெற்றது. இதில் அருந்ததியர் உறவின்முறை டிரஸ்டிகள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *