கோவை கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியல் துறையானது அனைத்துக் கல்லூரிகளுக்கிடையேயான எலெகன்சா’26 எனும் கலை விழா நடைபெற்றது
இந்நிகழ்விற்குக் கல்லூரியின் முதல்வர் முனைவர் கீதா தலைமையேற்று, “கலையார்வமே மாணவர்களைச் சிந்தனையாளனாக மாற்றும்” எனக் கூறினார். இக்கலைவிழாவில் கலந்துகொண்டோரை ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியல் துறையின் தலைவர் முனைவர் ரம்யா வரவேற்று வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஃபேஷன் வடிவமைப்பாளர் மற்றும் நடன அமைப்பாளர் அருண் பாலகிருஷ்ணா மற்றும் டிரெண்ட் ஃபோர்காஸ்டர் வர்ஷா சி.கே நூலின் கதை நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஃபேஷன் வடிவமைப்பாளர் கெளஷிகா குமரேசன் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.
எலெகன்சா’26 நிகழ்வில் சிகையலங்காரம், முகவோவியம், நக அலங்காரம், லோகோ உருவாக்கம், மெஹந்தி, பாரம்பரிய ஆடைக்கண்காட்சி மற்றும் அணிவகுப்பு, மறுசுழற்சிப் பொருட்கள் உருவாக்கும், கலைத்திறனுடன் கூடிய நிபுணத்துவ வெளிப்பாடு எனப் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது
இந்நிகழ்வின் வெற்றியாளர்களுக்கு மிஸ்டர் அண்ட் மிஸ் எலெகன்சா’26, சிறந்த தனித்துவச் சிந்தனையாளர், சிறந்த கலைப்பொருள், சிறந்த புதுமை வித்தகர் முதலிய விருதுகளும் 50,000 மதிப்பிலான பரிசுகளும் வழங்கப்பட்டன. கலைநயத்தை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் 30 கல்லூரிகளைச் சேர்ந்த 400 மாணவர்கள் கலந்துகொண்டு தம் திறனை வெளிப்படுத்தினர்.