திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்
திருச்சி புத்தகத் திருவிழா 2026 சிஎஸ்ஐ செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க அரங்கில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் திருச்சி சார்பில் மகிழினியும் எறும்பும்
நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது

எழுத்தாளர் கார்த்திகா கவின் குமார் வரவேற்றார் வழக்கறிஞர் ரங்கராஜன்
முன்னிலை வகித்தார் மாவட்ட நூலக அலுவலர் இரா.சரவணக்குமார் நூலினை வெளியிட திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலர் சமூக செயற்பாட்டாளர் பெ.விஜயகுமார் முதல் பிரதியினை பெற்றுக்கொண்டார்.

ஓவியர் பெருமாள் வாழ்த்துரை வழங்கினார் எழுத்தாளர் சீத்தா வெங்கடேஷ், கதைசொல்லி மு.ஜுபைதா, முனவர் ‘கதைசொல்லி வித்யா இளங்கோவன்,
பொ.ஸ்சாக்ஷித்தா (இரண்டாம் வகுப்பு),ச.சபரிஷ் (ஒன்பதாம் வகுப்பு) உள்ளிட்டர் நூலினை விமர்சனம் புரிந்தனர்.ஐந்தாம் வகுப்பு பயிலும் இளம் எழுத்தாளர் ஹாசினி ஏற்புரையாற்றினார் நிறைவாக ஆசிரியர் ஆனந்தி நன்றி கூறினார்.
ஏழாம் வகுப்பு பயிலும் ஹ.அஃபீபா (ஏழாம் வகுப்பு) நிகழ்ச்சியினை தொகுத்தளித்தார். பள்ளி மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *