தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் குண்டடம் வருகை தந்து, மறைந்த புஷ்பாத்தாள் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் பொன். ருத்ரகுமார், மேலும் அதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மற்றும் ருத்ராவதி பேரூராட்சி துணைத்தலைவர் பொன். மோகன்ராஜ் ஆகியோரின் தாயார் தயார்புஷ்பாத்தாள் அவர்கள் சமீபத்தில் வயோதிகக் காரணங்களால் காலமானார். இவரது மறைவு அந்தப் பகுதியில் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று குண்டடம் வந்து, மறைந்தவரின் இல்லத்தில் குடும்பத்தினரை நேரில் சந்தித்தார். தயார்புஷ்பாத்தாள் அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தினார்.
தொடர்ந்து, பொன். ருத்ரகுமார் மற்றும் பொன். மோகன்ராஜ் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்த அண்ணாமலை அவர்கள், “தாயின் இழப்பு எதனால் மாற்றிக்கொள்ள முடியாத ஒன்று. இந்த துயரத்தை தாங்கிக் கொள்ள இறைவன் உங்களுக்கு மன வலிமை தர வேண்டும்” என்று ஆறுதல் கூறினார்.
இந்த நிகழ்வில் பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள், உள்ளூர் கட்சி பொறுப்பாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இறுதிச் சடங்கில் மரியாதை செலுத்தினர்.
மறைந்த தயார்புஷ்பாத்தாள் அவர்கள் எளிமையான பண்பு, அன்பு மனம் மற்றும் சமூக அக்கறை கொண்டவராக இருந்ததாக உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவுகூர்ந்தனர்.