தேசிய அளவிலான மலைப்பகுதி சைக்கிள் போட்டியில் கோவை புதூர் ஆஸ்ரம் பள்ளி மாணவிகள் தங்கம் வென்று அசத்தல்
அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ற மலை நிலப்பரப்பு சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு 9 தங்கம் உட்பட 15 பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு ஆஸ்ரம் பள்ளி மாணவிகள் உற்சாக வரவேற்பு வழங்கினர்…
22-வது தேசிய மலை நிலப்பரப்பு சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 12-ந்தேதி அருணாசல பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது 4 நாட்கள் நடைபெற்ற இதில் இந்தியாவில் சுமார் 29 மாநிலங்களை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் தமிழக அணி சார்பாக கோவையில் இருந்து கோவைபுதூர் ஆஸ்ரம் பள்ளி முன்னாள் மாணவியான சவுபர்ணிகா மற்றும் தற்போதைய பள்ளி மாணவியான ஹாசினி உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்..
பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் ஆரம்பம் முதலே தமிழக வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி 9 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் ஆக மொத்தம் 15 பதக்கம் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர் இதில் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சவுபர்ணிகா 2 தங்கம் வென்று தேசிய அளவில் சிறந்த வீராங்கனையாகதேர்வு செய்யப்பட்டார்..
இதே போல, ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவி ஹாசினி 2 தங்கம் வென்று கவனம் ஈர்த்துள்ளனர் இந்நிலையில் கோவை இரயில் நிலையம் வந்த வீரர்,வீராங்கனைகளுக்கு மாநில மாவட்ட சைக்கிள் சங்கத்தினர் மற்றும் ஆஸ்ரம் பள்ளி மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்..
தொடர்ந்து தமிழ்நாடு சைக்கிளிங் சங்க தலைவர் மாணிக்கம் வெற்றி பெற்ற வீரர்,வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களை பாராட்டினர்..
இந்த சந்திப்பின் போது ஆஸ்ரம் பள்ளி நிர்வாகி கவுரி உதயேந்திரன்,சைக்கிளிங் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி,சபரி மற்றும் பயிற்சியாளர்கள் உடனிருந்தனர்