அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஇலந்தைகுளம் கிராமத்தில் ஸ்ரீ நல்லதங்காள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து 48 வது நாள் மண்டல பூஜை நடந்தது. இதில் பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க காசி இராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு மண்டல பூஜை நடந்தது.கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு கோவிலின் சார்பில் பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இவ்விழா ஏற்பாடுகளை விழா ஏற்பாடுகளை ஶ்ரீ நல்லதங்காள் கோவில் பங்காளிகள், பெரியஇலந்தைகுளம், குட்டிமேய்க்கிபட்டி, கோவிலூர், கீழக்கரை, அழகாபுரி, முடுவார்பட்டி, 15.பி.மேட்டுப்பட்டி, செம்புக்குடிப்பட்டி, மதுரை, அலங்காநல்லூர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *