கடலூர் மாவட்டம், சின்ன காட்டு சாகை கிராமத்தில் உள்ள ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் உற்பதி நாற்று பண்ணையில், “குரு பஞ்சகவ்யம்” தயாரிக்கும் நடைமுறைப் பயிற்சி காவேரி கூக்குரல் நாற்றுப்பண்ணை பணியாளர்கள் மற்றும் தோட்டக்கலை மாணவர்–மாணவிகளுக்காக நடத்தப்பட்டது.

பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நடத்தி வரும் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் பணியாற்றி வரும் மாணவர்கள், அக்கல்லூரியின் இணைப் பேராசிரியர் முனைவர் எஸ். ஆனந்தகுமார் அவர்களின் மேற்பார்வையில் இப்பயிற்சியை நடத்தினர்.

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ் மாறன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

பஜன்கோவா வேளாண் கல்லூரியின் இணை பேராசிரியர் டாக்டர் எஸ். ஆனந்த்குமார் அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து பேசுகையில், ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் மண் காப்போம் போன்ற திட்டங்களை மக்கள் இயக்கமாக செயல்படுத்தி வருகிறது.

அத்திட்டங்களின் நோக்கங்களுக்கு பொருத்தமாக, திரு. ஜகத் குரு என்பவர் குரு பஞ்சகவ்யம் என்ற இயற்கை கரைசல் ஒன்றை கண்டுபிடித்தார்.

அந்த குரு பஞ்சகவ்யம் பல விவசாயிகளுக்கு ஆச்சரியமூட்டும் வகையில் பயன் அளிப்பதாக அவர்களின் அனுபவங்கள் தெரிவிக்கின்றன. அதனால், ஒரு லிட்டர் சுமார் 100 ரூபாய் வரை அது விற்பனை ஆகிறது. ஆனால், தற்சார்பு கருதி ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் தானே பயிற்சி பெற்று அதை உற்பத்தி செய்து பயனடைய இந்தப் பயிற்சி ஒரு அரிய வாய்ப்பு என்றார்.

அதைத் தொடர்ந்து மாணவர்கள் ஸ்ரீதர் மற்றும் தமிழ்மாறன் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
குரு பஞ்சகவ்யம் தயாரிக்க, 3 கிலோ நாட்டு மாட்டு சாணம், அரை கிலோ நாட்டுச் சர்க்கரை, கூழ் பத்த்தில் 3 லிட்டர் புளிச்சக்கீரைச் அல்லது கோமியம், அரை லிட்டர் குரு பஞ்சகவ்யம் ஆகிய அனைத்தையும் சேர்த்து முதல் கலவையைத் தயாரித்து 3 நாட்கள் நொதிக்க விட வேண்டும்.

இரண்டாம் கலவையாக 4 கிலோ சோற்றுக் கற்றாழை மற்றும் 2 கிலோ கற்பூரவள்ளி அல்லது வெப்பாலை அல்லது எருக்கன் இலை ஆகியவற்றை அரைத்து, அந்த இரண்டாவது களவையில் ஒரு நாள் கழித்து நாட்டுச் சர்க்கரை, பத்தில் ஒரு பங்கு, அதாவது மொத்தம் 6 கிலோ கலவைக்கு 600 கிராம் கலக்க வேண்டும்.

இந்த இரண்டாவது கலவையையும் 3 நாட்கள் நொதிக்க விட வேண்டும்.
பின்னர், இரு கலவைகளையும் 30 லிட்டர் குளோரின் இல்லாத நீருடன் சேர்க்க வேண்டும். இதைத் தொடர்ந்து, முன்பு குரு பஞ்சகவ்யம் பயன்படுத்திய நிலத்தின் மண் ஒரு பிடி மற்றும் மூன்று லிட்டர் குரு பஞ்சகவ்யத்தை தாய் திரவமாக சேர்த்து, 4 அல்லது 5 நாட்கள் காலை, மாலை கடிகார முள் சுற்றும் திசையில் இடது பக்கத்தில் இருந்து வலது புறம் 60 முறை கலக்க வேண்டும்.

அவ்வாறு 7 அல்லது 8 நாட்களில் குரு பஞ்சகவ்யம் தயாராகிவிடும். கலவை மற்றும் கரைசலை துணியால் மூடி கட்டி வைக்க வேண்டும் என்பதையும் செய்து காட்டினர். ஒரு லிட்டர் தண்ணீரில் 60 மில்லி கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.

கல்லூரியின் சார்பாக முதல்வர் முனைவர் சங்கர் மற்றும் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பாக தகவல் தொடர்பு மற்றும் ஊடாக
ஒருங்கிணைப்பாளர் சுவாமி சுவெக்னா அவர்களின் ஒப்புதலுடன்,ஈஷா இயக்கத்தின் நதிகளை மீட்போம் , மண் காப்போம் திட்டங்களின் இயக்குநர் திரு.ஆனந்த் எதிராஜலு அவர்களின் ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது.

பயிற்சியின் விவாதங்கள் மற்றும் சந்தேகங்களுக்கான தீர்வுகளை மாணவர்கள் திவ்யதர்ஷினி ஶ்ரீராம்சாம் , தண்டபாணி, ஆகியோர் பதிவு செய்து ஆவணமாக்கினர்.

முன்னதாக மாணவர் சேரன் அனைவரையும் வரவேற்றார். மாணவர் நந்தகுமார் நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் நன்றி உரைத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *