திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அடுத்த காவணூர் கிராமம்
ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஓ.என்.ஜி.சி காவேரி அசட் காரைக்கால் சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை கும்பகோணம் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச பொது நல மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஓஎன்ஜிசி அசட் சப்போர்ட் மேனேஜர் பிரசன்ஜித் கோகய் தலைமை வகித்தார் ஓஎன்ஜிசி சமுக பொறுப்புணர்வு திட்டஅதிகாரி தங்கமணி ஓஎன்ஜிசி மருத்துவ அலுலர் கனேஷ்குமார் ஓஎன்ஜிசி மேலாளர் பொது மேலாளர் ஜோஸ் வர்கீஷ் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கூத்தாநல்லூர் வட்டாட்சியர் சுமதி கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்.இதில் கூத்தாநல்லூர் துணை வட்டாட்சியர் மணிவண்ணன் கொரடாச்சேரி காவல் ஆய்வாளர் சிவகுமார் முன்னாள் ஊராட்சி தலைவர் மோகன்தாஸ் ஓ.என்.ஜி.சி உதவி பொறியாளர் முருகானந்தம் பாதுகாப்பு ஆய்வாளர் ராஜபாண்டி எல்டர்ஸ் பார் எல்டர்ஸ் நிறுவன இயக்குனர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் மருத்துவ முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
பயனாளிகள் மருத்துவரிடம் பொதுமருத்துவம் மருத்துவ ஆலோசனை கண் பரிசோதனை ஈ.சி.ஜி இரத்தமாதிரி செய்யப்பட்டது. பரிசோதணையின் முடிவில் கண் கண்ணாடி தேவைபடும் 168 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடி தயார் செய்து வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
50 முதியோர்களுக்கு கைத்தடி களும் வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை கடலூரை சேர்ந்த எல்டர்ஸ் பார் எல்டர்ஸ் பவுண்டேஷன் நிறுவனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது