திருவள்ளூர் மாவட்டம் பாரதிதாசன் நிறைநிலைப் பள்ளியில் 21 ஆம் தேதி அரசுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநருமான முனைவர்.கோ. விசயராகவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு “செந்தமிழே உயிரே நறுந்தேனே” என்னும் தலைப்பில் மிக அருமையான உணர்வு பூர்வமாக உரையாற்றினார்.நிகழ்ச்சியில் 2024 – 25 ஆம் கல்வியாண்டில் அரசுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளித் தாளாளர் மோ.தி.உமாசங்கர் நினைவுப்பரிசுகள் வழங்கினார்.

விழாவில் கல்வி ஒருங்கிணைப்பாளர் சு.நா.சுந்தர் மாணவர்களிடத்திலே ஊக்க உரையாற்றினார். இதில் பள்ளி முதல்வர் நல்லாசிரியர் ஜோ.மேரி, பள்ளி தலைமையாசிரியர் தே.குமரீஸ்வரி, தமிழ்த்துறை தலைவர் கை.இந்திரா மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *