தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் முன்னிலையில் 14 புதிய திட்டப்பணிகளுக்கு ரூ.103.80 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டி, 60 முடிவுற்ற திட்டப்பணிகளுக்கு ரூ.45.74 கோடி மதிப்பீட்டில் திறந்து வைத்து, 1,828 பயனாளிகளுக்கு ரூ.14.73 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் 4,115 பயனாளிக்குக்கு ரூ.27.80 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை (21.02.2026) வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி, தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.ரூபன் சங்கர் ராஜ், முன்னாள் அமைச்சர் முனைவர். பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, திருமதி.வேடம்மாள், திரு.இன்பசேகரன், திரு.மனோகரன், கைம்பெண் நலவாரிய உறுப்பினர் திருமதி.ரேணுகாதேவி, ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் திரு.சரவணன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இரா.காயத்ரி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.