தஞ்சாவூர். பிப்.22.
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி முத்தாளம்மாள் நகர் அருள்மிகு ஸ்ரீஆனந்த குபேர சாய்பாபா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மூன்றாம் ஆண்டு வருடாபிஷேகம் நடைபெற்றது.

வெள்ளிகிழமை மாலை பெண்கள் சிறப்பு விளக்கு பூஜை நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி சிறப்பு விருத்திராக கொண்டார். காலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மகா சங்கல்பம், புண்யாஹவாசனம் கலச அர்ச்சனைகள் அதையடுத்து மஹாபூர்ணாஹதி, தீபாராதனை அபிசேகம், அர்சனைபிரசாதம் அன்னதானம் நடைப்பெற்றது.

மாலையில் ஸ்ரீ ஆனந்த விநாயகர், ஸ்ரீ ஆனந்த முருகன் சந்தனகாப்பு அலங்காரம். தொடர்ந்து ஸ்ரீ நிருத்தியாஞ்சலி நாட்டிய கலாலவர் தஞ்சாவூர் க.சுபத்ரா மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், தஞ்சாவூர் ஆர்.ராஜா ஸ்ரீவர்சனின் பக்தி இசை நிகழ்ச்சியை தொடர்ந்து ஆன்மீக சேவை புரிந்த சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிர்வாக அறங்காவலர் லயன் எஸ்.முரளி தலைமையில் pவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் செய்திருந்தனர். முடிவில் தஞ்சாவூர் லயன் எம்.மாலதியின் ஜீவன் ஸ்ருதி ஆர்கெஸ்ட்ராவின் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *