கரூர் செய்தியாளர் மரியான் பாபு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமை துவக்கி வைத்த செந்தில் பாலாஜி.. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கரூர் பிரம்ம தீர்த்தம் சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் ரத்ததான முகாம் கரூர் மாவட்ட தலைவர் எம். எஸ்.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு இரத்ததான முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பொன்ஜெயராம், மாநிலத் துணைத் தலைவர் செல்வராணி, முன்னாள் மாவட்ட தலைவர் சக்திவேல் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இரத்ததான முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜா ரத்தக் கொடையாளர் சான்று வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

கரூர் மருத்துவக்கல்லூரியில் ரத்த தானம் பெறுவதற்கு தனி பிரிவு உள்ளதைப் போல கண் தானம் மற்றும் உடல தானம் பெறுவதற்கு தனிபிரிவுகள் உள்ளது. இரத்த தானத்தை போலவே உடல் தானத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் குறிப்பாக இருந்தவர்களின் கண்களை குறிப்பிட்ட சில மணி நேரத்தில் கண் தானம் செய்வதால் விழித்திரை மட்டும் தானமாக எடுக்கப்பட்டு கண் பார்வை வழங்கப்படுகிறது என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *