திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியம் பெல்லம்பட்டி கிராமம் பகுதியில் இரு சக்கர வாகனம் திருட்டு குண்டடம் பகுதியில் இரவு மோளவலசு செந்தில் என்பவர் தோட்டத்தில் சூப்பர் எக்ஸெல் வாகனம் திருட்டுப் போய் உள்ளது.

இதில் அருகிலுள்ள பரமேஸ்வரன் என்பவர் தோட்டத்தில் ஆடு பிடிக்க திருடர்கள் அன்று இரவு வந்து தப்பித்து சென்றுள்ளனர்.

பிறகு இதன் காரணமாக இன்று21-2-2026 இரவு10:00மணி முதல் பெல்லம்பட்டி பேருந்து நிறுத்தத்தின் அருகில் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதி குண்டடம் கிராம பகுதியாகும், இப்பகுதியில் அடிக்கடி கேபிள் ஒயர் மற்றும் ஆடுகள் இருசக்கர வாகனம் மற்றும் ஆறு மாத காலமாக திருடு போவதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இக்கிராம பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை போலீசார் இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி கண்காணிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகளில் கோரிக்கையாக எழுந்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *