தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 76 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வழங்கினர்.

தொடர்ந்து, கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில், வேலூரில் தேர்தல் அறிக்கை குழு மக்களை சந்திக்க வேண்டியதுள்ளது. அது முடிந்த பின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்..

ஓ பன்னீர்செல்வம் திமுக கூட்டணி என்பது இருந்தால் அதை நிச்சயமாக தமிழக முதல்வர் வெளியிடுவார்.. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை எப்பொதும் சுமூகமாக தான் இருந்திருக்கிறது.. நீண்ட நாளாக இருக்கக்கூடிய ஒர் உறவு. கொள்கைக்காக உருவாக்கி இருக்கின்ற கூட்டணி இந்த கூட்டணி.. ஆகவே, நிச்சயமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்கும்..

கே.என் நேரு மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய உள்ளது குறித்த கேள்விக்கு? பலமுறை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.. தேர்தல் வந்துவிட்டால் இன்கம்டாக்ஸ், சிபிஐ, ஈடி தான். ஆகவே, தமிழ்நாட்டிலும் அதன் வேலையை துவங்கியிருக்கிறார்கள் என்றார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *