திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 25 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சி.ருக்மணி தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் மு.ரமணன், செயலாளர் பிரியா ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சித.ரவிச்சந்திரன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் இளநிலை மாணவிகள் மற்றும் முதுநிலை மாணவிகள் உள்பட 798 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
மேலும் திருவள்ளுவர் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டது. மேலும் பட்டயம் பெறும் மாணவிகள் சாதனை பெண்களாக திகழ வேண்டும் என்று வலியுறுத்தினார். பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற மாணவிகளின் அனைத்து கல்வி கட்டணத்தையும் காசோலையாக அவர்களிடம் திருப்பி வழங்கப்பட்டது. இறுதியில் பட்டமளிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.