கடத்தூர் பகுதியில் பாமக சார்பில் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நேற்று நடந்தது இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார் .
தர்மபுரி மாவட்டம் மிகவும் வறட்சியான மாவட்டம் இந்த மாவட்டத்தில் போதிய தொழில் வளம் இல்லாததால் இந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் இளைஞர்கள், வெளிமாநில மாவட்டங்களில் வேலை தேடி வேலை பார்க்கின்றன நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்துவதன் மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் சென்று விவசாயத்தை பாதுகாக்க முடியும் , பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாணியாறு , பொதியம் பள்ளம் , ஆனை மடுவு , தொப்பையாறு , உள்ளிட்ட பகுதிகளில் நீர் கால்வாய்கள் அணைகளை தூர்வாரி நீரை தேக்கி வைப்பதன் மூலம் விவசாயிகள் பயன்படும் வகையில் உள்ளது .
இந்தத் திட்டத்தை சிறிய முறைகள் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் , தமிழகத்தில் அனைத்து சமுதாயத்தினரும் சமூகநீதியை பயன்படுத்தும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன்படி உரிய இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும் , தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இதனை செயல்படுத்த வேண்டும் இல்லை என்றால் 2026 சட்டமன்றத் தோல்வியை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார் ,