கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூர் வெண்ணமலை இயங்கி வரும் தனியார் சேரன் பள்ளி 12ஆம் வகுப்பில் சாதனை.. பன்னிரண்டாம் வகுப்பில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளனர்.மாணவன் B. கோகுல் 600 க்கு 588 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.


K.M. சுகந்த் எனும் மாணவன் 600 க்கு 587 மதிப்பெண்ணும், R. ஷிஃபா 600 க்கு 587 மதிப்பெண்ணும் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.
K.B. தனநிதினி 600க்கு 585 மதிப்பெண்ணும், K.சத்யதாரணி 600க்கு 585 மதிப்பெண்ணும் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.


மேலும் 20 மாணவர்கள் கணினி அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்களும் கணிதப் பாடத்தில் 3 மாணவர்கள் 100/100 மதிப்பெண்களும், உயிரியல் பாடத்தில் 2 மாணவர்கள் 100/100 மதிப்பெண்களும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
தமிழ்ப்பாடத்தில் 7 மாணவர்கள், ஆங்கிலப் பாடத்தில் ஒரு மாணவர், இயற்பியல் பாடத்தில் 3 மாணவர்கள், வேதியியல் பாடத்தில் 4 மாணவர்கள், 99/100 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

சாதனை புரிந்த மாணவச் செல்வங்களுக்கு பள்ளி செயலாளர். P.M.K. பெரியசாமி, தாளாளர். P.M.K. பாண்டியன் முதல்வர். V. பழனியப்பன்,இருபால் ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர் பெருமக்கள், மாணவ,மாணவிகளுக்கு தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *