திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியத்தில் தெள்ளார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான முதல் சுற்று பயிற்சி சிறப்பாக நடைபெற்றது.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பள்ளிகளை சேர்ந்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியை வட்டார கல்வி அலுவலர் தே.ரங்கநாதன் தொடங்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர்கள் சுப.தமிழ் நேசன், பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். பயிற்சியினை மாநில பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.