தமிழ்நாட்டிலேயே அதிக பட்சமாக மதுரையில் நேற்று 106 டிகிரி வரை வெப்பநிலை பதிவானது. சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
தமிழ்நாட்டில் கோடைகாலம் துவங் கியது
முதல் மாநிலத்தின் பல்வேறு பகு திகளில் தினசரி வெயில் அளவு 100 டிகிரி முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகி வருகிறது. இதில் மதுரை மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நேற்று 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா கூறியதாவது; கடந்த 2015 முதல் நடப்பு ஆண்டு வரை 10 ஆண்டுக ளில் ஆண்டுதோறும் வெயிலின் அளவு குறைந்தபட்சம் 101 டிகிரி முதல் 106 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகி வருகிறது.
இதற்கு முன்பு 2017, மே 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 106.5 டிகிரி வெப்பமும், 2021 மே 3ம் தேதி 108.6 டிகிரி வெப்பமும் பதிவாகி இருந்தது. 3 ஆண்டுகளுக்கு பின் நேற்று மதுரை விமான நிலையத்தில் 106 டிகிரி வெப்பமும், மதுரை மாநகரில் 105 டிகிரி வரை வெப்பமும் பதிவாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடப்பு மாதம் வரை இது மாநிலத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாகும். அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் அளவு மேலும் படிப்படியாக அதிகரித்து தென்மாவட்டங்க ளில் 107 முதல் 108 டிகிரி பாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அத்யாவசிய தேவையின்றி வெளியில் வருவதை தவிர்ப்பது நல்லது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.