துறையூர்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் துறையூர் நகர அஇஅதிமுக சார்பில் நகர செயலாளர் அ.அமைதிபாலு தலைமையில் கழக பொதுச் செயலாளர், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர்,முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, ஏழை எளியோர் 200 நபர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கினார்.மேலும் துறையூர் நகரம் 15 ஆவது வார்டை சார்ந்த 25 நபர்கள், பல்வேறு இயக்கத்தில் இருந்து விலகி, சபரி ஏற்பாட்டில் நகர கழக செயலாளர் முன்னிலையில், மாவட்ட செயலாளர் தலைமையில்,கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையேற்று , அஇஅதிமு கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ இந்திரா காந்தி,பொதுக்குழு உறுப்பினர் சரோஜா இளங்கோவன்,எம்ஜிஆர் அணி மாவட்ட செயலாளர் அறிவழகன் விஜய்,நகர அவை தலைவர் ரவிவர்மா, வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்.காமராஜ்,மாவட்ட பிரதிநிதி மருதமுத்து, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கவிதை மணி,அம்மா பேரவை துணை செயலாளர் தீனதயாளன் (நகர்மன்ற உறுப்பினர்), எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் எம் சிவபொன்னன், அய்யம்பாளையம் கிளை செயலாளர் வழக்கறிஞர் ஏ.எஸ்.மனோகரன், வழக்கறிஞர்கள் செந்தில்குமார், கண்ணதாசன், குன்னுப்பட்டி மணிவண்ணன், இளைஞர் அணி நகர செயலாளர் விவேக், நகர பாசறை ஆதித்ய வர்மா,நகை கடை பாஸ்கர், மகேந்திரன், கிளை செயலாளர்கள் டாஸ்மாக் ராமு, சங்கர், அருணாசலம், விவசாய அணி துணை அமைப்பாளர் விஜயரங்கன்,மைவிழி, கீதா, ரெங்கநாதபுரம் பத்மாவதி, அபி இளங்கோ, முத்துக்குமாரலிங்கம், வடிவேலு, பாஸ்கர் ,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்