தேனி மாவட்டம் சின்னமனூரில் சித்தி விநாயகர் கோவில் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கம் சங்கரன் ரெட்டியார் சேவா சங்கம் இந்த சங்கம் சார்பில் அனைத்து கோவில் கும்பாபிஷேகம் மற்றும் அனைத்து விசேஷ நாட்களிலும் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்குவது வழக்கம் இதன்படி நேற்று தமிழகத்திலேயே அம்மன் கோவில்களில் 8 நாட்கள் திருவிழா நடைபெறும் ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெற்றதைத் தொடர்ந்து கொளுத்தும் கோடை வெயிலில் பொது மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் 32 ஆம் ஆண்டு பக்தர்களுக்கு நீர் மோர் பந்தல் மற்றும் சர்க்கரை பொங்கல் வழங்கும் நிகழ்ச்சிக்கு சேவா சங்கத் தலைவர் கே எஸ் பெருமாள் தலைமை வகித்து நீர் மோர் மற்றும் சர்க்கரை பொங்கலை பொது மக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து சங்கத்தின் குருசாமி இ. லோகேந்திர ராஜன் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கினார்கள்.