மதுரை வைகை வடகரை ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய கள்ளழகரின் தசாவதாரம்!

மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8ஆம் தேதி தொடங்கியது இதனைத் தொடர்ந்து 3 ம் நாள் நிகழ்வாக மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக சுந்தரராஜ பெருமாள் கள்ளர் வேஷமிட்டு மதுரை நோக்கி புறப்பட்டார்.

நான்காம் நாள் நிகழ்வாக மதுரைமூன்றுமாவடி பகுதியில் இருந்து எதிர் சேவை நிகழ்வானது நடைபெற்றது மூன்று மாவடி ,புதூர், டி.ஆர்.ஓ.காலனி, ரிசர்வ் லைன் தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் எதிர்சேவை நடைபெற் றது.

இதனை தொடர்ந்து 5 ஆம் நிகழ்வாக நேற்று முன்தினம் அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது தொடர்ந்து மதிச்சியம் பகுதியில் உள்ள ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நடை பெற்று பின்னர் பல்வேறு பகுதிகளில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.

இதனை தொடர்ந்து 6-ம் நாள் நிகழ்வாக நேற்று காலை வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் எழுந்தருளிய பின்னர் மாலை மதுரை வண்டியூர் தேனூர் மண்ட பத்தில் மண்டூக முனிவ ருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடை பெற்றது.

இதையடுத்து வண்டியூர் அண்ணாநகர், உள்ளிட்ட பகுதி களில் மண்டகப்படிகளில் எழுந்தருளிய பின்னர் அங்கிருந்து ராமராயர் மண்டபத்திற்கு எழுந்தருளிய கள்ளழகருக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடைபெற்றது
பின்னர் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது.

கிருஷ்ண பரமாத்மா வைகுண்டத்தில் இருக்கும் பரம்பொருள் திரு மால் பூலோகத்தை காக்க பல அவதாரங்களை எடுத்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டினார் அதுவே தசாவ தாரமாகும்.

அதனை எடுத்துரைக்கும் வகையில் கள்ளழகர் தசாவதாரநிகழ்வு தொடங்கிய போது முத்துக்களால் ஆன அங்கியை அணி வித்த முத்தங்கி சேவை நடைபெற்றது. இதனை தொடர்ந்து முதலில் மச்ச அவதாரம் அலங்காரத்திலும், அதன் தொடர்ச்சியாக கூர்ம அவதாரம்.. வாமன அவதாரம், இராம அவதாரம், கிருஷ்ண அவ தாரம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கூடியுள்ளஏராளமான பக்தர்கள் கள்ளழகரை தரிசித்தனர். இதனைதொடர்ந்து மோகினி அவதாரம் நடைபெற்றது. அலங்காரம்

இந்த தசாவதார அலங்காரங் களில் காட்சியளித்த கள்ளழகரை பக்தர்கள் விடிய விடிய தரிசித்தனர் இதனைத்தொடர்ந்து கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடை பெற்று அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்தில் கள்ளழகர்எழுத்தருள, நாளை அதிகாலை 3 மணிக்கு மேல் தல்லாகு ளம் சேதுபதி மன்னர் மண்டபத்தை அடைகிறார் அங்கு பூப்பல்லக்கில் கள் ளழகர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *