நாட்டின் சுதந்திரத்துக் காக வ.உ.சிதம்பரனார் செய்த தியாகங்கள் ஏராளம் என மதுரையில் அவருக்கு 150 அடி உயர சிலை அமைக்க அடிக்கல் நாட் டும் விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.


கப்பலோட்டிய தமிழனும், சுதந்திர போராட்ட வீரருமான வ.உ.சிதம்பரம்பிள்ளையின் 150 அடி உயர சிலை மதுரை மாவட்டத்தில் ரூ.10.2 கோடியில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா – மதுரை பாண்டிகோவில் ரிங் ரோடு அருகே உள்ள அம்மா திடலில் நேற்று நடந்தது.

இந் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டினார். விழாவில் மத்திய இணை மந்திரி எல். முருகன், பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம், ஏ.சி.எஸ். அறக்கட்டளை அருண்குமார், ரவிக்குமார். நடிகர் விஜயகுமார். இயக்குனர் சுந்தர் சி., தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன், பி.டி.ஆர்.தனபால், புதுச்சேரி அனைத்துலக முதலியார் பிள் ளைமார் சங்க மாநில தலை வர் ஸ்ரீதர்பிள்ளை, அகில உலக முதலியார் பிள்ளை மார் அமைப்பு நிறுவனர் அருணாச்சலம், தென் இந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்க மதுரை தலைவர் தனவேலன், மதுரை பாண்டியன் அப்பளம் திருமுருகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *