திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் , ஒளவை அறக்கட்டளை,விஜிபி உலக தமிழ்ச் சங்கம், ஆஸ்திரேலியா தொல்காப்பிய மன்றம் ஆகிய சார்பில் 24 வது அனைத்து உலக தமிழ் ஆய்வு மாநாடு ,உலக தாய்மொழி நாள் விழா நடந்தது.
இந்நிகழ்ச்சியில் ஔவை அறக்கட்டளை செயலாளர் முகில் வேந்தன் வரவேற்றார் ,
தமிழ் ஐயா கல்விக் கழக தலைவர் டாக்டர் நரேந்திரன் தலைமை வகித்தார். மாநாட்டு இயக்குனர் கலைவேந்தன் மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினார்.
எம்எல்ஏ துரை சந்திரசேகரன் உலக பெருந்தமிழர் விருது வழங்கி பேசினார். சமூக சேவகர் தம்பிராஜா (எ ) முகமது, திரைப்பாடலாசிரியர் , ரோட்டரி சங்க ஆளுநர் டி என் ஜெயகுமார் உட்பட 20 பேருக்கு உலகப் பெருந்தமிழர் சிறப்பு விருது வழங்கப்பட்டது. தமிழிசை மன்ற பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் , திமுக ஒன்றிய செயலாளர்கள் சிவசங்கரன் , கெளதமன்,பனையூர் தண்டபாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஒளவைக்கோட்ட அறிஞர் பேரவைத் தலைமை அமைச்சர் மதிவாணன் தலைமையில் நூல் வெளியீட்டு விழா நடந்தது.
அந்தமான் அய்யாராஜு நூல்களை வெளியிட்டு பேசினார்.
யாழ்ப்பாணம் இந்திய அயலகப் பணி முன்னாள் துணைத்தூதர் நடராஜன் தொல்காப்பியர் மாமனி விருது வழங்கி பேசினார்.ஒளவைக்கோட்ட அறிஞர் பேரவை மூத்த அமைச்சர் புலவர் கந்தசாமி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.அரசர் கல்லூரி முன்னாள் முதல்வர் கலியபெருமாள் , திருமழபாடி தமிழ்ச் சங்க தலைவர் ஆறுமுகம் ஆகியோர் திருவுருவ படங்கள் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமமிழகத்தின் தலைசிறந்த கல்லூரிக்கான விருது உளுந்தூர் பேட்டை ஜவகர்லால் நேரு மகளிர் கல்லூரிக்கும் ,சிறந்த தமிழ்ச்சங்கத்திற்கான விருது இளங்கடு நற்றமிழ்ச் சங்கத்திற்கும் வழங்கப்பட்டது.கோவை ஈசன் கலைக்கூடம் பாரதி கண்ணம்மா குழுவினர், மெலட்டூர் பாகவதமேளா பிரியம்வதா முரளி குழுவினரின்அப்பர் கயிலை காட்சி நாட்டிய நாடகம் நடந்தது.நிறைவில் சங்க தலைவர் செல்வராசு நன்றி கூறினார். மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.