தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் அரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் கிராம ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்து வரும் நிலையில் காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலு பெற்று வருகிறது. நிதி இல்லை என்று சொல்லி நீதி வழங்க மறுக்கும் தமிழக அரசுக்கு இரவு பகல் பார்க்காமல் முழுவதும் உழைக்கின்ற வருவாய் கிராம ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கையை விடுத்து இன்று அரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.