திருத்துறைப்பூண்டி.,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் தெய்வமாய் திருத்துறைப்பூண்டி வட்டம் பாமணி ஊராட்சி பைபாஸ் சாலையில் அருள் பாலிக்கும் அருள்மிகு நல்ல மாணிக்கர் சுவாமிகள், அருள்மிகு கோட்டை காளியம்மன், மற்றும் பரிவார தெய்வங்கள்.

ஸ்ரீ சித்த காத்தான், ஸ்ரீ தூண்டில் காரன், ஸ்ரீ நொண்டி வீரன், ஸ்ரீ ஆனந்த வீரன், ஸ்ரீ வீரன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி, ஸ்ரீ அன்னசிவன் ,ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ அக்னி வீரன், ஸ்ரீ குறநாதர், ஸ்ரீ ரெங்கு ரெட்டியார், ஸ்ரீ தொட்டிச்சி அம்மன், உள்ளிட்ட ஆகிய தெய்வங்களுக்கு

ஒரே நேரத்தில் 15 கலசங்களில் புனித நீர் ஊற்றி ஜீரோ தாரண வர்ண கலாபரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் குழந்தைகள் சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா உடன் கூடிய ஆலயமாக அமைந்துள்ளது கும்பாபிஷே விழாவினை ஆலய திருப்பணிக்குழுவினர் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *