மதுரை எல்லீஸ்நகரில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கிப் பேசியதாவது,உலகில் பல்வேறு நாடுகளில் குழந்தைகள் பிறப்பு விகிதம்
குறைந்து வருகிறது. இதேபோல இந்தியாவிலும் குறைந்து வருவது வேதனையளிக்
கிறது. குறிப்பாக தமிழகத்தில் ஒரு குடும்பத்திற்கு சராசரியாக குழந்தைகள் பிறப்பு சதவிதமாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.நகர்
புறங்களில் மட்டுமே அனைத்து வகை யான சிகிச்சை களுக்கும் நவீன முறை யிலான மருத்துவ சிகிச்சை இருந்தது.

ஆனால், தற்போது கிராமப்புறங் களில் உள்ள ஆரம்பச்சுகாதார நிலையங்களில் மருத்துவத் துறை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்
பட்டுள்ளன. மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப்
பெண்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்று ஸ்கேன் செய்யவேண்டிய நிலை இல்லை. சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வடக்கு மாசி வீதி தத்தனேரி ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஸ்கேன் வசதி செய்யப்பட்டது.

மேலும், குழந்தை பிரசவிக்கும் மருத்துவமனை களிலும் அனைத்து வகையான சிகிச்சை களும் அளிக்கப்படுகிறது. மருத்துவ கட்டமைப்பு வசதி களால் நகர்ப்புற மக்கள் மட்டு மின்றி கிராமப்புற மக்களும் பயன் பெற்று வருகின்றனர் என்றார் அவர்.
இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்களின் மதுரை மாவட்ட திட்ட அலுவலர் ஷீலா சுந்தரி, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ஆஷாராணி மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *