தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர். பிப் 24.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் சார்ந்த கீழக்குறிச்சி ஊராட்சியில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மண்டலக்கோட்டை கிராமத்தை தனி ஊராட்சியாக பிரித்து தரவேண்டும் மண்டலக்கோட்டை கிராமத்தில் கீழக்குறிச்சி கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் VAO வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் முகாம் அலுவலகமாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பல முறை கூறியும் மனுக்கள் அளித்தும் எவ்வித பலனும் இல்லாத காரணத்தினாலும்,மண்டலக்கோட்டை வளர்ச்சிக்கு அரசு அறிவிக்கும் எந்த திட்டங்களும் சிறுபான்மை கிராமமான எங்கள் பகுதிக்கு பஞ்சாயத்து நிர்வாகத்தினால் கொடுக்கபடும் திட்டங்கள் முழுமையாக கிடைக்கவில்லை என்பதாலும், கிராம மக்கள் ஒன்றிணைந்து கிராம கூட்டம் நடத்தி அடையாள அட்டை, குடும்ப அட்டைகளை ஒப்படைத்து தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனார்.