பட்டுக்கோட்டையில் அதிமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட கழகம் சார்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து இருசக்கர வாகன பேரணியாக சென்று புறவழிச் சாலையில் உள்ள மூவர் சிலையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தஞ்சை தெற்குமாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தஞ்சை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.வி.சேகர் தலைமை தாங்கினார்.

அதன் முதல் நிகழ்வாக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சிவி சேகர் தலைமையில், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து இருசக்கர வாகன பேரணியாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து புறவழிச்சாலையில் உள்ள மூவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாநில இளைஞர் அணி செயலாளர் ஜவகர் பாபு , கழக அமைப்புச் செயலாளர் கல்யாண உடை செந்தில் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் மேலும் ஏற்பாட்டின் பேரில் மூன்று லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 463 நபர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் 300 ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து போக்குவரத்து அலுவலக டெப்போ மற்றும் ஒன்றிய பேரூர் கழகங்களில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *