தேனி நகரில் எம்பி தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா
தேனி மாவட்டம் தேனி நகரில் உள்ள என்.ஆர்.டி.மஹாலில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் தேனி வட்டாரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் இங்குள்ள என்.ஆர்.டி திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சிக்கு தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமை தாங்கினார்
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் தேனி நகராட்சி நகர்மன்ற தலைவர் ரேணு பிரியா பாலமுருகன் நகராட்சி நகர் மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வம் செல்வகுமார் நகர செயலாளர் சூர்யா பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து தாய்மார்களுக்கும் சேலை தட்டு மஞ்சள் குங்குமம் கிழங்கு கண்ணாடி வளையல் வெற்றிலை பாக்கு பழம் போன்ற மங்களகரமான பொருட்கள் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து தாய்மார்களுக்கும் வழங்கப்பட்டது
மேலும் தயிர் சாதம் லெமன் சாதம் வெஜிடபிள் பிரியாணி தக்காளி சாதம் புளி சாதம் காய்கறி கூட்டு உள்ளிட்ட 7 வகை அறுசுவை சைவ உணவு வகைகளை கர்ப்பிணி தாய்மார்களுக்கு தனது கையால் சிறப்பாக விருந்து அளித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து தாய்மார்களும் தீர்க்க சுமங்கலியாக சுகப்பிரசவம் அடைந்து நூறாண்டு காலம் வாழ வேண்டும் என ஆசிர்வதித்து அர்ச்சனைகள் செய்து மனதார வாழ்த்தினார் தாயுள்ளம் கொண்ட தேனி எம்பி .இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் என்.சி நாராயண பாண்டியன் நகர் மன்ற கவுன்சிலர்கள் மற்றும் ஏராளமான கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.