குறிஞ்சிப்பாடி வட்டம்
வடலூர், பார்வதிபுரம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், (62). போலீஸ் எஸ்ஐ., ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில், அந்த பகுதியை சேர்ந்த 200 குடும்பங்களின் வசதிக்காக பாதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அதே பகுதியை சேர்ந்த சிவபெருமான் குடும்பத்தினர், செல்வராஜை ஆபசமாக திட்டி, ஜேசிபி,யை ஏற்றி கொலை து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இச் சம்பவத்தையொட்டி செல்வராஜ் குறிஞ்சிப்பாடி கோர்ட்டி வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவின் பேரில் கொலை மிரட்டல் விடுத்த சிவபெருமான், அவரது மனைவி மோகனா, மகன் அருண், ஜேசிபி., ஓட்டுனர் லட்சுமணன் ஆகிய, 4 பேர் மீது வடலூர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.